ஆதி சைவம் – ஞான பாதம்

ஆதி சைவம் – ஞான பாதம்

 

பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் …

 

இறையனார் தாம் அருளிய சுத்தாத்வைத சத்தியங்களை இறைமொழியாம் தமிழில் மீண்டும் உரைக்கின்றார்.

 

உயிர் பிரபஞ்சத்தில் மலர்ந்த உடன், ‘கடவுள் துகள்’ என்கின்ற நிலையில் இருந்து, ‘கடவுள்’ நிலையை உணர்வது, கடவுள் தன்மையை தனக்குள்ளிருந்து வெளிப்படுத்துவது, கடவுள் நிலையிலேயே இருப்பு கொள்வது என்கின்ற மிகப்பெரிய வழியின் ‘அறிவியல்’, அதை அடைவதற்கான வாழ்வதற்கான அறிவியல் – ‘ஆதி சைவம்’

ஆழ்ந்து கேளுங்கள்…மக்களே…தமிழ் எனும் பெருமொழி புரிகின்ற உடலும் மனமும் கொண்டதனாலேயே நீங்கள் புண்ணியவான்கள்.  ஏனென்றால்  அந்த ஒரு மொழியில்தான் ஆதிசைவத்தின் சத்தியங்கள் எல்லாம் நேரடியாய் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றது.

மற்றவர்கள் எல்லோருமே மொழி பெயர்ப்பைத்தான் படித்தாக வேண்டும். நீங்கள் ஒருவர் மட்டுமே நேரடியாய் படிக்கவும் அதன் துடிப்பை உங்கள் இதய துடிப்பாய் உணரவும் உங்களுக்குள் அதை உள்வாங்கவும்  வாழவும் வாழ்வியல் அனுபவமாக மாற்றி கொள்ளவும் மிகப்பெரிய வாய்ப்பு உடையவர்களாக இருக்கின்றீர்கள். நீங்கள் மட்டும்தான் இந்த மிக பெரிய புண்ணியத்திற்கு ஆளானவர்களாக இருக்கின்றீர்கள்.

தெரிந்து கொள்ளுங்கள் தமிழ் மொழி புரிந்து கொள்ளுகின்ற மனம் உங்களுக்கு இருந்திருக்குமானால்…
இருக்குமானால்…
இருந்தோ அல்லது இப்போது இருக்குமானால்…
சைவத்தை இழக்காதீர்கள்.
சைவத்தை கண்டு கொள்ளுங்கள், கண்டு அறியுங்கள் வாழுங்கள்.
அது உங்களுடைய வாழ்வியல் நெறியாக மாறட்டும். உங்கள் வாழ்வியல் சத்தியமாக மாறட்டும். வேறு எந்த சித்தாந்ததிலும் இத்துனை தெளிவாக கடைநிலை மனிதனுக்கும் கடைதேறும் வழியை இடைசெருகல் ஏதும் இல்லாது,  ஒரு இம்மி எடையும் சத்தியத்தில் குறையாது, எடையும் குறையாது மாத்திரையும் குறையாது, சத்தியத்தை சத்தியமாகவே சத்தியமாய் சதாசிவன் சொல்லி அருளிய வாழ்வியல் முறையான சைவம் பிடியுங்கள். வாழ்ந்திட வாழ வைக்கும் பெருவழியான சைவம் வாழுங்கள்.

ஆகமங்களாலும்…வழிவழியாய் வந்த சைவத்தை மீண்டும் உயிர்ப்பித்து ஸ்தாபனம் செய்த சர்வஞ்னபீடாரூடரான ஞான சம்பந்த பெருந்தகையாலும், அப்பர் பெருமான் எனப்படும் திருநாவுக்கரசு சுவாமிகளாலும்,  சுந்தரராலும், மாணிக்கவாசகராலும், நாயன்மார்களாலும்…நெறிபடுதப்பட்டு, வாழ்வியல் முறையாக வாழ்ந்து காட்டப்பட்ட பெருமானோடு இரண்டற கலக்கும் ‘சிவோஹம்’ எனும் நிலையில்…நித்யானந்தமாய் நிலைபெற்று இருக்கும் இந்த மிகப்பெரிய வாழ்வியல் ஞானம்சொல்லவும், கேட்கவும் மிகுந்த புண்ணியத்தை தருவது.சொல்லவும், கேட்கவும் வாழ்கையை மேம்படுத்துவது…

அதனால்தான்…

மேன்மை கொள் என்னும் வார்த்தையை உபயோகிக்கிறார்கள். மேன்மை கொள் என்றால்…சொன்னவர்கள், கேட்டவர்கள், எதிர்காலத்தில் கேட்கப்போகிறவர்கள்… இவர்கள் எல்லோருக்கும் மேன்மையை கொடுப்பது, மேன்மையில் அவர்களை நிறுத்துவது மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.

மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்…
மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்…
மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்…