Bhagavad Gita: Science of Enlightenment (Tamil)

உங்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் மஹாபாரத யுத்தமே. உங்கள் வாழ்வென்னும் யுத்தத்தின் உண்மையான வெற்றி என்பது, தர்மத்தின் வெற்றி என்பது… உங்களுடைய சுபாவமான “ஜீவன்முக்த நிலையை – மனத்தின் ‘குறைவுணர்வு’ நிலையான அதர்மத்தி=டமிருந்து மீட்டெடுப்பதே. மனத்தின் குறைவுணர்வுகளே அதர்மமாக வெளிப்படுகிறது. உங்களுடைய தர்மமான ‘ஜீவன் முக்தி’க்கான முதல்படி, உங்களுக்குள் இருக்கும் அதர்மத்தை அகற்றுவதே. அதனால்தான், மஹாபாரத யுத்தத்தைத் துவங்குவதற்கு முன்பு, பகவான் ஸ்ரீகிருஷ்ணர், ‘பகவத்கீதையை’ – “ஜீவன்முக்த விஞ்ஞானத்தை’ அர்ஜுனனுக்கு ‘தீட்சை’யாக வழங்கினார். நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள், எல்லா யுத்தமும் மஹாபாரதம் ஆகாது. கிருஷ்ணரால், வாழும் குருவால் வழிநடத்தப்படும் யுத்தம் மட்டுமே ‘மஹாபாரதம்’ ஆகும். ‘தீட்சை’ பெற்ற அர்ஜுனன், தம்முள் இருந்த குறைவுணர்வுகளை முதலில் அழித்தார். ஞானசத்குருநாதர் அளித்த தீட்சையின் சக்தியால், ‘ஜீவன்முக்த உணர்வை – பூரணத்துவ உணர்வை’ தம்முள் மீட்டெடுத்தார். பின், குருவின் ஆலோசனைப்பெற்று யுத்தம் செய்தார், வெற்றிப்பெற்றார். அர்ஜுனனைப்போன்றே நீங்களும் உள் உலகிலும், வெளி உலகிலும் வெற்றி பெறமுடியும். அதற்கு நீங்கள் பெறவேண்டியது, கிருஷ்ணரிடமிருந்து, குருவிடமிருந்து ‘ஜீவன்முக்தி’க்கான தீட்சையே. இந்தப் புத்தகம் உங்களுக்கு ‘ஜீவன்முக்த’ தீட்சையை அளிக்கும். ஸ்ரீமத் பகவத்கீதை, உங்கள் ஒவ்வொருவருடைய ‘ஜீவன்முக்தி’க்கான வரைபடம். பிரார்த்தணை உணர்வோடு ஒவ்வொரு வரியையும் படியுங்கள், ‘தீட்சை பெறுவீர்கள். ஞானகுரு தரும் ஒவ்வொரு தீர்வும் ‘தீட்சையே’. குருவிடமிருந்து பெறும் தீட்சை,

டபிடிக்கப்படாதபொழுது, அது ‘ஜீவன்முக்த’ அனுபூதிக்கான விதையாக மட்டுமே இருக்கும். அதனால்தான், பகவான் ஸ்ரீகிருஷ்ணர், தீட்சை அளித்த உடனே, அர்ஜுனனைத் தீவிரமான வைராக்கியத்தோடு செயல்படுவதற்கு, இயங்குவதற்கு அன்போடு கட்டளையிட்டார். கட்டளையை ஏற்று இயங்கியதால், அர்ஜுனன் பெற்ற ‘ஜீவன்முக்த விதை, அனுபூதியாக மலர்ந்தது. உங்களிடமிருந்து நான் கேட்பது இந்த ஒன்றை மட்டும்தான்… உங்களுக்குள் நிகழும் தீட்சையை சிரத்தையோடு வாழுங்கள்.)

அதுமட்டுமல்லாது, உங்கள் மனத்தின் குறைவுணர்வுகள் உங்களுக்கு எதிராக என்ன சூதுசெய்தாலும், எத்துணைமுறை பலவீனப்படுத்தினாலும்… சோர்வடையாது, உங்களை நீங்களே கைவிடாது, ‘குரு உங்களோடு இருக்கிறார்’ என்னும் சத்தியத்தை உணர்ந்து, ‘தீட்சை பெற்ற சீடராக ஆற்றலுடன் இயங்குங்கள். ஜீவன்முக்த அனுபூதி உங்களுக்குள் நிலைபெறத் துவங்கும். நீங்கள் எல்லோரும் ஜீவன் முக்த அனுபூதியில் நிலைபெற்று, நித்யானந்தத்தில் நிலைத்து, நித்யானந்தத்தில் நிறைந்து, நித்யானந்தமாகிட ‘ஆசீர்வதிக்கின்றேன். ஆனந்தமாக இருங்கள். – பரமஹம்ஸ நித்யானந்தர்